close
முகப்புநாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி 40 ராக்கெட் 

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி 40 ராக்கெட் 

January 11, 2018 271Views
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி 40 ராக்கெட் 

31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி 40 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

நாளை காலை ஒன்பது 28 மணிக்கு பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.  இஸ்ரோ அனுப்பும் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டில் அமெரிக்கா, லண்டன், கனடா, தென்கொரியா, பின்லாந்த், பிரான்ஸ் உள்ளிட்ட 28 வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் இடம் பெறுகின்றன. 

இந்தியாவின் 710 கிலோ எடைகொண்ட கார்டோசாட் ட்டூ செயற்கைக்கோள், 100 கிலோ எடைகொண்ட மைக்ரோ செயற்கைகோள், 5 கிலோ எடைகொண்ட நானோ செயற்கைகோள் ஆகிய மூன்று செயற்கைகோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன. 

இதில் மைக்ரோ சேட்டிலைட் இந்தியாவின் 100-வது செயற்கைகோள் ஆகும். இது 2018-ம் ஆண்டில் இந்தியா விண்ணில் செலுத்தும் முதல் செயற்கைகோள் இதுவாகும்.