close
முகப்புநீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி

நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி

January 13, 2018 243Views
நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளை கவனமாக கையாள வேண்டும்: ராகுல் காந்தி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது நீதிபதிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மிக கவனமாக கையாள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகூர் ஆகியோர் நீதித்துறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும், தலைமை நீதிபதி பாரபட்சமான முறையில் நடந்துகொள்வதாகவும் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது நீதிபதிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் மிக கவனமாக கையாளப்பட வேண்டும் என்றார். நீதிபதி லோயா மரணம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.