close
முகப்புநீதிபதிகள் பிரச்சனை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும் : அட்டார்னி ஜெனரல்

நீதிபதிகள் பிரச்சனை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும் : அட்டார்னி ஜெனரல்

January 14, 2018 199Views
நீதிபதிகள் பிரச்சனை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும் : அட்டார்னி ஜெனரல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரச்சனை இரண்டு நாட்களில் தீர்க்கப்படும் என அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பிலோகூர், குரியன், ஜோசப் ஆகியோர் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பரபரப்பு குற்றம் சாட்டினார்கள். உச்ச நீதிமன்றத்தில் நீதித்துறை நிர்வாகம் சீர்குலைந்து விட்டதாகவும், பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், வரும் திங்கட்கிழமைக்குள் நீதிபதிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டு, அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஒன்றாக இணைவார்கள் என்று தெரிவித்தார்.