close
முகப்பு நீருக்குள் இருந்து துப்பாக்கி குண்டுகள், வெடிப்பொருட்களை கைப்பற்றிய போலீசார்

நீருக்குள் இருந்து துப்பாக்கி குண்டுகள், வெடிப்பொருட்களை கைப்பற்றிய போலீசார்

 நீருக்குள் இருந்து துப்பாக்கி குண்டுகள், வெடிப்பொருட்களை கைப்பற்றிய போலீசார்

கேரளாவில் குட்டிபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே நீருக்குள் இருந்து துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர். 

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பரதபுழா ஆற்றின் பாலத்திற்கு அடியில் கடந்த 5ஆம் தேதி 5 கண்ணி வெடிகள், 2 உலோக பொருட்கள் மற்றும் 6 கோணி பைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதனைதொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், மலப்புரத்தில் குட்டிபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே நீருக்குள் இருந்து அதிக அளவிலான துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கும்பல் பற்றி விசாரணையின் முடிவில் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.