close
முகப்புபல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டிக் கடத்திய வனக்காவலர்கள் கைது 

பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டிக் கடத்திய வனக்காவலர்கள் கைது 

November 23, 2017 297Views
பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டிக் கடத்திய வனக்காவலர்கள் கைது 

பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டிக் கடத்தியதாக வனக்காவலரை போலீசார் கைது செய்தனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வன கோட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட கிராம வனப்பகுதிகளில் சுமார் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் நாவல், வேம்பு மற்றும் ஆச்சாமரங்கள் அதிகளவில் உள்ளன. 

இந்நிலையில் பெரம்பலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ரஞ்சன்குடி வனப்பகுதியில் 40 ஆண்டு வயதுடைய சுமார் 5 முதல் 6 அடி சுற்றளவுள்ள  நாவல் மரங்கள் உட்பட, வேம்பு மற்றும் வெல்வேல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரஞ்சன் குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுக்குரு என்பவர் வெட்டி கடத்தியதாக கண்டறிந்தனர். இதனைதொடர்ந்து, மரங்களை வெட்டி கடத்தியதற்கு உதவிய வனக்காவலர் ஆணையப்பனை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் மோகன், அதிமுக பிரமுகர் சுக்குரு ஆகியோரை தேடி வருகின்றனர்.

 மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாவட்ட விவசாயசங்கத்தினர், மரக்கடத்தலில் ஈடுபட்டவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாய  சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.