close
முகப்பு பழனி முருகனை சந்திக்க மீண்டும் ரோப்கார் சேவை தொடக்கம் 

பழனி முருகனை சந்திக்க மீண்டும் ரோப்கார் சேவை தொடக்கம் 

October 30, 2017 200Views
 பழனி முருகனை சந்திக்க மீண்டும் ரோப்கார் சேவை தொடக்கம் 

பழனி முருகன் மலைக்கோவிலில் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கியது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள புகழ்பெற்ற முருகன் மலைக்கோவிலில் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 12 -ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக சேவை நிறுத்தப்பட்டது. 

மின்மோட்டார்கள், இரும்புக் கம்பிகள், சக்கரங்கள் உள்ளிட்டவை பழுது பார்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியது. பக்தர்கள் ஆர்வமுடன் ரோப்காரில் ஏறி பழனி முருகனை தரிசிக்கச் சென்றனர்.