close
முகப்புபாகிஸ்தான் படையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல்

பாகிஸ்தான் படையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல்

October 13, 2017 225Views
பாகிஸ்தான் படையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூன்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலின் போது அவர்கள் துப்பாக்கி மற்றும் கையெறிக் குண்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, இந்திய ராணுவத்தினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்த மாதத்தில், பாகிஸ்தான் படையினர் நடத்திய 3வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 6ஆம் தேதி, ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.