close
முகப்புபாஜக-வினால் தான் அதிமுக அணிகள் ஒன்றுப்பட்டுள்ளன : திண்டுக்கல் சீனிவாசன்

பாஜக-வினால் தான் அதிமுக அணிகள் ஒன்றுப்பட்டுள்ளன : திண்டுக்கல் சீனிவாசன்

August 13, 2017 64Views
பாஜக-வினால் தான் அதிமுக அணிகள் ஒன்றுப்பட்டுள்ளன : திண்டுக்கல் சீனிவாசன்

மத்திய அரசுடன், தமிழக அரசு இணைந்து சுமூகமாக செயல்படுவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

உதகையில் அடுத்த மாதம் 11-ந் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக வந்த வனத்துறை அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தமிழக அரசுக்கு உதவி செய்து வருவதுடன் நிதி உதவி அளித்து வருவதாகவும், பா.ஜ.க இருப்பதால் தான் அ.தி.மு.க ஒன்றுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தமிழக அரசை மத்திய அரசு ஆட்டி வைப்பதாக எதிர்க்கட்சிகள் தேவையின்றி விளம்பரத்திற்காக பேசி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.