close
முகப்புபாரீஸ் பருவநிலை மாற்றம்: மனம் மாறும் டிரம்ப்?

பாரீஸ் பருவநிலை மாற்றம்: மனம் மாறும் டிரம்ப்?

January 11, 2018 307Views
பாரீஸ் பருவநிலை மாற்றம்: மனம் மாறும் டிரம்ப்?

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இதற்கான அறிவிப்பை தற்போதைய அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார். 

அமெரிக்காவுக்கு சாதகமாக ஒப்பந்தத்தில் எந்த அம்சமும் இல்லாததால் அமெரிக்கா விலகுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் (Erna Solberg) நேற்று டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். 

அப்போது டிரம்ப்பிடம் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் பற்றி கேட்கப்பட்டபோது, அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் அதில்  சேர்க்கப்பட்டால், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.