close
முகப்புபாஸ்போர்ட்-ஐ இனி முகவரி சான்றாக உபயோகப்படுத்த முடியாது

பாஸ்போர்ட்-ஐ இனி முகவரி சான்றாக உபயோகப்படுத்த முடியாது

பாஸ்போர்ட்-ஐ இனி முகவரி சான்றாக உபயோகப்படுத்த முடியாது

பாஸ்போர்ட்-ஐ இனி முகவரி சான்றாக உபயோகிக்க முடியாது எனவும் , கடைசி பக்கத்தில் எந்த தகவலும் அச்சிடப்படாது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. 

தற்போதுள்ள பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் குடும்ப நபர்களின் பெயர், முகவரி போன்ற தகவல்கள் குறிப்பிடப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை இணைந்து கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவில், இனி பாஸ்போர்டின் கடைசி பக்கத்தில் தந்தை பெயர் , முகவரி போன்ற தகவல்கள் தேவையில்லை என்றும், காலியாகவே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் பாஸ்போர்ட்டில் அச்சிடவில்லை என்றாலும், வெளியுறவுத்துறையின் தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படும்.  இதனால் அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது  அரசு ஊழியர்களுக்கு வெள்ளை நிறத்திலும், அரசு துறையில் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு சிகப்பு நிறத்திலும், மற்றவர்களுக்கு நீல நிறத்திலும் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த புதிய முறையில் இசிஆர் பாஸ்போர்ட்கள் ஆராஞ்ச் நிறத்திலும், இசிஆர் அல்லாத பாஸ்போர்ட்கள் நீல நிறத்தில் அச்சிடப்படும் என கூறப்பட்டுள்ளது.  புதிய பாஸ்போர்டின் வடிவமைப்பை நாசிக்கில் உள்ள மத்திய அரசின் அச்சகம் மேற்கொள்ளும்.