close
முகப்புபிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உலக வங்கி பாராட்டு

பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உலக வங்கி பாராட்டு

October 13, 2017 149Views
பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உலக வங்கி பாராட்டு

பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. 

உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் Jim Yong Kim பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என குறிப்பிட்டார்.  குறுகிய அல்லது நீண்ட கால அடிப்படையில் மோடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் பின்நோக்கி சென்றது உண்மை தான் என குறிப்பிட்ட Jim Yong Kim,  பின்னடைவு தற்காலிகமானது தான் எனத் தெரிவித்தார். ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறையும் என அண்மையில் உலக வங்கி கணித்திருந்தது. இதே போல் 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்துள்ளதாக சர்வதேச பன்னாட்டு நிதியம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.