close
முகப்புபிளாஸ்டிக்  முட்டைகள் விற்பனை : நடவடிக்கை எடுக்க  மக்கள் கோரிக்கை

பிளாஸ்டிக்  முட்டைகள் விற்பனை : நடவடிக்கை எடுக்க  மக்கள் கோரிக்கை

July 15, 2017 119Views
பிளாஸ்டிக்  முட்டைகள் விற்பனை : நடவடிக்கை எடுக்க  மக்கள் கோரிக்கை

வேதாரண்யம் அருகே  கடைகளில் பிளாஸ்டிக்  முட்டைகள் விற்கப்படுவதாக எழுந்துள்ள தகவலை அடுத்து  முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முட்டை, வழக்கம் போல் உள்ள முட்டையின் வடிவத்தை விட மாறுபட்டு காணப்பட்டுள்ளது. 

எனவே அந்த முட்டை பிளாஸ்டிக் முட்டையாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து முட்டையின் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்