close
முகப்புபுதிய குடியிருப்புகள் கட்டப்படுமா? துணைமுதலமைச்சர் பதில் 

புதிய குடியிருப்புகள் கட்டப்படுமா? துணைமுதலமைச்சர் பதில் 

January 11, 2018 278Views
புதிய குடியிருப்புகள் கட்டப்படுமா? துணைமுதலமைச்சர் பதில் 

மைலாப்பூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 488 வீடுகள் கொண்ட மறு கட்டமைப்பு ஏற்படுத்தி தரப்படும் என துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

4-வது நாளாக இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில், மைலாப்பூர் தொகுதி 173-வது வார்டு வள்ளீஸ்வரன் கோவில் தோட்டத்தில் உள்ள பழைய குடியிருப்புகளுக்கு மாற்றாக புதிய குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என மைலாப்பூர் உறுப்பினர் நட்ராஜ் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம், இந்த பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியத்தின் குடியிருப்புகள் வாரிய அதிகாரிகள் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியின் அடிப்படையில் மறு கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும், பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 488 வீடுகள் கொண்ட மறு கட்டமைப்பு ஏற்படுத்தி தரப்படும் என துணைமுதலமைச்சர் தெரிவித்துள்ளார்.