close
முகப்புபுதுச்சேரி சட்டப்பேரவை வாயிலில் அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை வாயிலில் அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

January 09, 2018 136Views
புதுச்சேரி சட்டப்பேரவை வாயிலில் அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை வாயிலில் அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவசப்பொருட்கள் இதுவரை கொடுக்கப்படவில்லை. மேலும், இதற்கான ஒப்புதலை ஆளுநர் கிரண்பேடி வழங்காமல் இருப்பதை கண்டித்து அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசானா உள்ளிட்ட  4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென சட்டப்பேரவை வாயில் தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே, முதலமைச்சர் நாராயணசாமி  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்ய முயற்சி செய்தார். இருப்பினும் பொங்கல் பொருட்கள் வழங்க அரசு உறுதியளித்தால் தான் இந்த இடத்தில் இருந்து புறப்படுவோம் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். 

பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த திடீர் போராட்டத்தால் சட்டப்பேரவை வளாகம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்புடன் காணப்பட்டது.