close
முகப்புபேரறிவாளன் விடுதலை வழக்கு 14-ம் தேதி விசாரணை:  உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பேரறிவாளன் விடுதலை வழக்கு 14-ம் தேதி விசாரணை:  உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

August 10, 2017 136Views
பேரறிவாளன் விடுதலை வழக்கு 14-ம் தேதி விசாரணை:  உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் , சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இதனால், அவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு  அரசியல் கட்சித்  தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர். 

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்த வழக்கை, வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.