close
முகப்புபேரவையில் சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர்?

பேரவையில் சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர்?

January 11, 2018 361Views
பேரவையில் சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர்?

கடந்த 6 ஆண்டுகளில் 906 கிலோ மீட்டர் வனச்சாலை: பேரவையில் அமைச்சர் தகவல்

கடந்த ஆறு ஆண்டுகளில் 107 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 906 கிலோமீட்டர் தூரத்திற்கு வன சாலை அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். 

அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட குருமலை பகுதியில் சாலைகள் இல்லாததால் மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக  தெரிவித்தார். 

எனவே, வன பகுதிக்கு உட்பட்ட குருமலை பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வன சாலை அமைக்க வேண்டும் என்றால் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும், வன சாலை அமைப்பதற்கான சட்டம் கடுமையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆறு ஆண்டுகளில் 107 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 906 கிலோமீட்டர் தூரத்திற்கு  வன சாலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அணைக்கட்டு தொகுதிக்கு திமுக ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை என்றும் ஆனால் அதிமுக ஆட்சியில் 32 கிலோமீட்டருக்கு வன சாலை அமைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, சபாநாயகர் குறுக்குட்டு சமாதானப்படுத்தினார்.