close
முகப்பு பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு 

பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு 

January 12, 2018 270Views
 பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு 

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என்றும் அதற்கான முன்பதிவும் தொடங்கப்படும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக 11, 12, 13 தேதிகளில் 5 ஆயிரத்து 158 சிறப்புப் பேருந்துகள் உள்பட 11 ஆயிரத்து  958 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், நேற்று இயக்கப்பட வேண்டிய 796 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

இருப்பினும், ஏற்கெனவே அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய சுமார் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். அப்பயணிகளுக்கு உரிய ஏற்பாட்டை மேற்கொண்ட விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளை இயக்க ஓட்டுநர்களை தயார் செய்து அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், பொங்கல் சிறப்புப் பேருந்துகள்  இன்று முதல் இயக்கப்படும் என்றும் அதற்கான முன்பதிவும் தொடங்கப்படும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.