close
முகப்புபோக்குவரத்து ஊழியர்களுடன் முதல்வர் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: விஜயகாந்த்

போக்குவரத்து ஊழியர்களுடன் முதல்வர் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: விஜயகாந்த்

January 11, 2018 232Views
போக்குவரத்து ஊழியர்களுடன் முதல்வர் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: விஜயகாந்த்

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் முதலமைச்சர் பழனிசாமி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என சேலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம்,  தாரமங்கலத்தில் தே.மு.தி.க சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் தே.மு. தி.க சார்பில்  வழங்கப்பட்டன. அதற்கான விழாவில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.  

விழாவின் போது நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான,பொங்கல் பரிசினை  அப்பகுதி மக்களுக்கு  விஜயகாந்த் வழங்கினார். அப்போது பொங்கல் வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த், தன்னால் பேச இயலவில்லை  என வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சிவகாசி பட்டாசு ஆலை பிரச்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்