close
முகப்புபோதையில் தொல்லை கொடுத்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் 

போதையில் தொல்லை கொடுத்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் 

October 12, 2017 162Views
போதையில் தொல்லை கொடுத்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் 

கோவில்பட்டி திலகர் நகரில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி மது போதையில் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்த மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திலகர் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இரவில் திடீரென அனைத்து வீட்டு கதவுகளையும் ஒரு மர்ம நபர் தட்டிவிட்டு, அங்குள்ள குடியிருப்பு வாசிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். 

மது போதையில் இருந்த அந்த மர்ம நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

முன்னுக்கு பின்னாக அவர் பேசியதால் அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மது போதையில் ரகளையில் ஈடுபட்டார அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.