close
முகப்புமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோரிக்கை

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோரிக்கை

August 07, 2017 124Views
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கோரிக்கை

மதுரை மாவட்டம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் விபத்துகளும் அதிகமாக நடைபெறுகிறது என்றும், அவ்வாறு  விபத்து ஏற்படுத்தும் வாகனம் நிற்காமல் சென்று விடுவதால், அந்த  வாகனத்தை  போலீசாரால் கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும், விழாக்காலங்களில் அதிக கூட்டம் கூடுவதால் திருடர்களின் எண்ணிக்கையும் பெருகிவிட்டது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அதனால், விபத்துகளை தடுக்கவும், இரவு நேரங்களில்  பயம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளவும் , பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.