close
முகப்புமயானத்தில் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஆய்வு

மயானத்தில் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஆய்வு

November 11, 2017 227Views
மயானத்தில் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஆய்வு

மேட்டூர் அருகே புதுச்சாம்பள்ளியில் உள்ள மயானத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் இறக்கக்கூடியவர்களை அடக்கம் செய்வதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்தில், சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில், தற்போது சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், அதனருகில் உள்ள பி.என்.பட்டி பேரூராட்சிகளில் இருந்து அள்ளப்படும் குப்பைகள் மட்டுமின்றி அருகில் உள்ள சிட்கோ, மற்றும் சிறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை இந்த மயானத்தில் இரவோடு இரவாகக் கொட்டி செல்வதாக புகார் எழுந்துள்ளது. 

இதனால், நாளடைவில் சடலங்களை அடக்கம் செய்வதற்குக்கூட இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, மயான பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்தார். 

திருட்டுத் தனமாக குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வீரக்கல்புதூர் பேரூராட்சி செயல் அதிகாரிக்கு அறிவுறுத்தினார்.