close
முகப்புமழை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட பழைய காவல்நிலைய கட்டடம்

மழை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட பழைய காவல்நிலைய கட்டடம்

November 11, 2017 161Views
மழை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட பழைய காவல்நிலைய கட்டடம்

மயிலாடுதுறை அருகே அபாயகரமாக உள்ள பழைய காவல்நிலைய கட்டடம் மழை காரணமாக தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் காவல் நிலைய கட்டடம் கடந்த 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த காவல்நிலையம் கட்டுப்பாட்டில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் கனமழையின் காரணமாக காவல்நிலையம் கட்டடத்தில் தண்ணீர் கசிந்து காவல் நிலையம் முழுவதும் தண்ணீராக இருந்ததால் கோப்புகள் அனைத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. 

மழை பாதிப்பை பார்வையிட்ட தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார். மழையால் கோப்புகள் சேதமடையாமல் இருப்பதற்கும் போலீசார் நலன் கருதி அருகில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதிக்கு காவல்நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யுமாறு தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.