close
முகப்புமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

October 30, 2017 399Views
மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர் மழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆட்சியர் அன்புச்செல்வன் ஆலோசனை நடத்தினார். சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து,  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று,  காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இன்று மழை காரணமாக  சென்னை மற்றும் காஞ்சிபுரம் பள்ளிகளிலும் ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.