close
முகப்புகுண்டும் குழியுமான சாலை... கன்னட நடிகை நூதனப்போராட்டம்...!

குண்டும் குழியுமான சாலை... கன்னட நடிகை நூதனப்போராட்டம்...!

October 13, 2017 193Views
குண்டும் குழியுமான சாலை... கன்னட நடிகை நூதனப்போராட்டம்...!

குண்டும்  குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, கன்னட நடிகை சோனு கௌடா பெங்களூருவில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், சாலை வசதிகள் சரியில்லை என்றும் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.  இந்தநிலையில், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்கா பகுதியில், கன்னட நடிகை சோனு கௌடா மற்றும் ஓவியக் கலைஞர் நஞ்சுண்டசமி ஆகியோர் இணைந்து, குளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் சோனு கௌடா மீன் போன்ற உடை அணிந்து  நூதன முறையில் போராடினார். 

முன்னதாக, கடந்த 10-ம் தேதி அங்குள்ள தாவணஹல்லி பகுதியில், பெண் ஒருவர் சாலையில் உள்ள பள்ளத்தில் தனது இருசக்கர வாகனம் சிக்கிய விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.