close
முகப்புமுதல்வர் தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்

முதல்வர் தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்

October 11, 2017 263Views
முதல்வர் தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவை கூட்டம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று  நடைபெற்றுவருகிறது .  அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டம் போன்றவைகள்குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பழைய பென்ஷன்  திட்டத்தையும் 7-வது ஊதிய உயர்வையும் அமல்படுத்த வேண்டும் என்று கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். இந்தப் பிரச்சனை குறித்து முடிவுசெய்வதற்காக, இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள். 

அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத் திட்டங்கள்குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் டெங்கு குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது. வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா, மாநிலம் முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.