close
முகப்புமுதல் முறையாக இந்தியா வந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர்

முதல் முறையாக இந்தியா வந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர்

January 14, 2018 103Views
முதல் முறையாக இந்தியா வந்துள்ளார் இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் முதல் முறையாக ஆறு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இன்று காலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடாயான்ஹூ ஆறு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்தியா வருவது இதுவே முதன்முறையாகும்.

இந்த பயணத்தின் மூலம் இஸ்ரேல் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பாதுகாப்புபடை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் நாளை பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான வளர்ச்சி குறித்து ஆலோசிக்க உள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையில் எரிசக்தி மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்ற ஒப்பந்தங்கள் கையொப்பமிட இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோடி இஸ்ரேல் பயணத்தின் போது கையெழுத்திட்ட தொழில்நுட்பம், நீர் மற்றும் வேளாண்மையின் ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தங்களை அமல்படுத்துவதில் இஸ்ரேல் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இந்தியா ஆதரவளித்திருந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் இஸ்ரேல் தூதர், ஜெருசலேம் விவகரத்தில் இந்தியாவின் ஆதரவிற்கும் தற்போதைய இஸ்ரேல் பிரதமரின் வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஜெருசலேம் விவகாரம் இந்த சந்திப்பை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் இந்தியா இஸ்ரேல் உறவு எப்போது ஆரோகியமாக நீடிக்கும் எனவும் குறிபிட்டுள்ளார்.