மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மூங்கில் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். மும்பை அந்தேரி பகுதியின் எஸ்.வி.சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மூங்கில் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும், இந்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.