close
முகப்புமுறைகேடாக நீர் விற்பனை: இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

முறைகேடாக நீர் விற்பனை: இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

August 06, 2017 104Views
முறைகேடாக நீர் விற்பனை: இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகில் கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து,  ஆழ்துளை கிணறு அமைத்து, முறைகேடாக நீர் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் இருக்கும் செண்பகவல்லியம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, ஆழ்துளை கிணறு  அமைத்து முறைகேடாக, குடிநீர் விற்பனை செய்து வருவதாகத் தெரிகிறது.  இந்நிலையில் அங்கு நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், அந்த ஆழ்துளை கிணற்றினை கைப்பற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு தர வலியுறுத்தியும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக,  அந்த ஆக்கிரமிப்பாளர்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதியினர் முன்பே  சாலைமறியலில்  ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.