close
முகப்பு மெக்சிகோவில் 3-வது முறையாக நிலநடுக்கம்

மெக்சிகோவில் 3-வது முறையாக நிலநடுக்கம்

September 24, 2017 125Views
  மெக்சிகோவில் 3-வது முறையாக நிலநடுக்கம்

மெக்சிகோவில் 3-வது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 - ஆக பதிவாகியுள்ளது.

மெக்சிகோவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 248 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில், நேற்று மாலை 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி ஒன்றாக பதிவாக மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். 

இந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.