close
முகப்புயுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு..

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு..

October 13, 2017 109Views
யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவிப்பு..

இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை யுனெஸ்கோ கொண்டுள்ளதாகக் கூறி, அமெரிக்கா அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோவில் ழுழு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து நிதி வழங்குவதை நிறுத்திக் கொண்ட அமெரிக்கா, தொடர்ச்சியாக இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் யுனெஸ்கோ உடன் முரண்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது யுனெஸ்கோவின் தேவையே தங்களுக்கு தேவையில்லை என தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  தற்போது யுனெஸ்கோ அமைப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவு வருத்தமளிப்பதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே, 1980-ல் னெஸ்கோ அமைப்பிலிருந்து விலகிய அமெரிக்கா, கடந்த 2003-ல் மீண்டும் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.