close
முகப்புரோஹிங்கியா அகதிகளால் வறுமையில் வாடும் வங்கதேசம் 

ரோஹிங்கியா அகதிகளால் வறுமையில் வாடும் வங்கதேசம் 

October 13, 2017 124Views
ரோஹிங்கியா அகதிகளால் வறுமையில் வாடும் வங்கதேசம் 

ரோஹிங்கியா அகதிகளால் வங்கதேசத்தில் வறுமை உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் சிலர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.  

மியான்மரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்ததன் காரணமாக ரோஹிங்கியா முஸ்லீம்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இதுவரை 5லட்சத்து 80ஆயிரத்திற்கு மேற்பட்ட ரொஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.  நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அதிகப்படியான ரொஹிங்கியா முஸ்லீம்கள் வருகையால் தங்களது வேலைவாய்ப்பு மற்றும் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வங்கதேச குடிமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், சட்டத்திற்கு புறம்பாக நுழைந்த பெரும்பாலான அகதிகள் முகாமில் தங்கியுள்ளதாகவும், சிலர் வங்கதேச மக்களோடு கலந்து வாழ்ந்து வருவதாகவும், அகதிகளுக்கான வாழ்வாதாரத்திற்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

முன்னதாக, தேவை ஏற்பட்டால் நாளொன்றுக்கு ஒருவேளை மட்டும்  முழு உணவு உட்கொண்டுவிட்டு மீதமுள்ளவற்றை ரொஹிங்கியா அகதிகளுக்கு தானமாக அளித்து விடுவோம் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.