close
முகப்பு ரோஹிங்கிய மக்களை கொலை செய்தது உண்மை தான்...ஒப்புக்கொண்ட மியான்மர் ராணுவம்

ரோஹிங்கிய மக்களை கொலை செய்தது உண்மை தான்...ஒப்புக்கொண்ட மியான்மர் ராணுவம்

January 11, 2018 224Views
 ரோஹிங்கிய மக்களை கொலை செய்தது உண்மை தான்...ஒப்புக்கொண்ட மியான்மர் ராணுவம்

ரோஹிங்கிய மக்களை கொலை செய்தது உண்மை என மியான்மர் நாட்டு ராணுவம் ஒப்புகொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மர் நாட்டின் ராணுவம், அந்நாட்டில் வசித்து வரும் ரோஹிங்கியா இஸ்லாமிய இனத்தவர்களை அழிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், சமீப காலத்தில் லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள், வங்கதேசம், இந்தியா போன்ற அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

ரோஹிங்கியா தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதாக கூறி, பல ரோஹிங்கியா கிராமங்களுக்கு பாதுகாப்பு படையினரும், பல்வேறு தரப்பினரும் தீ வைத்து, அங்கிருக்கும் மக்களை விரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதை மியான்மர் அரசும் அந்நாட்டு ராணுவமும் இதுவரை முற்றிலும் மறுத்து வந்தது. 

சமீபத்தில், தலைநகருக்கு அருகே உள்ள கிராமத்தில் 10 உடல்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல்கள் ரோஹிங்கிய மக்களின் உடல்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அவர்களை கொலை செய்தது யார் என்பது குறித்து முழு விசாரணை நடத்த மியான்மர் ராணுவம் உத்தரவிட்டது. 

இந்த விசாரணையில் தற்போது, ராணுவத்தினரும், அருகே  உள்ள கிராம மக்களும் சேர்ந்தே இந்த கொலைகளை செய்ததாக தெரிய வந்துள்ளது. 200 ரோஹிங்கிய தீவிரவாதிகள், கத்தி, வாள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி முயற்சித்ததாகவும், அவர்களில் 10 பேரை ராணுவம் கைது செய்ததாகவும் தெரிகிறது. 

இதன்பின்னர், அவர்களை தலைமையிடம் ஒப்படைக்காமல், அந்நாட்டு பாதுகாப்பு படையினரும், சில கிராம மக்களும் சேர்ந்து, கொலை செய்ய முடிவெடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்கள் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.