close
முகப்புவட கொரியாவிற்கு எதிராக களமிறங்கும் ஆஸ்திரேலியா

வட கொரியாவிற்கு எதிராக களமிறங்கும் ஆஸ்திரேலியா

October 13, 2017 100Views
வட கொரியாவிற்கு எதிராக களமிறங்கும் ஆஸ்திரேலியா

வட கொரியாவின் அத்துமீறல்களுக்கு எதிராக, தென் கொரியாவுடன் ஆஸ்திரேலியா கைகோர்த்துள்ளது. 

வட கொரியாவின் அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகளால் சர்வதேச அரங்கில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மராய்ஸ் பெயின் ஆகியோர் தென் கொரியவிற்கு பயணம் மேற்கொண்டனர். 

பின்னர், தலைநகர் சியோலில் நடைபெற்ற சந்திப்பில் தென் கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் காங் யுங் வா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் யங் மூ உள்ளிட்டோரை சந்தித்தனர். அப்போது, வட கொரியாவின் அச்சுறுத்தல் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

சந்திப்பின்போது பேசிய ஜூலி பிஷப், பல்வேறு அச்சுறுத்தல்களை அரங்கேற்றி வரும் வட கொரியாவிற்கு எதிராக தென் கொரியாவுடன் ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதி அளித்தார். இந்த சந்திப்பில்  ஆஸ்திரேலிய மற்றும் தென் கொரிய அரசு உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.