close
முகப்புவண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் மெட்ரோ சுரங்கப் பாதை பணி நிறைவு

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் மெட்ரோ சுரங்கப் பாதை பணி நிறைவு

September 24, 2017 235Views
வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் மெட்ரோ சுரங்கப் பாதை பணி நிறைவு

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

வண்ணாரப்பேட்டை தங்கசாலை முதல் கொருக்குபேட்டை வரை 1.8 கி.மீ சுரங்க பாதை தோண்டும் பணி டனல் போரிங் இயந்திரம் மூலமாக  நிறைவடைந்துள்ளது

கொருக்குபேட்டை முதல் திருவெற்றியூர் விம்கோ நகர் வரை 7 கி.மீ உயர்த்த பட்ட பாதையாக அமைக்கும் பணி அடுத்த கட்டமாக நடைபெற்று வருகிறது

9 கி.மீ வரையிலான மெட்ரோ சேவை திட்டத்தில் 2 சுரங்க இரயில் நிலையமும், 6 உயர்த்தப்பட்ட இரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. தியாகராயர் கல்லூரி சுரங்க இரயில் நிலையம், கொருக்குபேட்டை சுரங்க இரயில் நிலையம் ஆகிய இரு மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்கபடுகின்றன. 

இதற்கான பணிகள் 2019 -ம் ஆண்டிற்க்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது