close
முகப்புவரும் 12ஆம் தேதி விவாதம் நடத்த தயாரா : அன்புமணி சவால்

வரும் 12ஆம் தேதி விவாதம் நடத்த தயாரா : அன்புமணி சவால்

வரும் 12ஆம் தேதி விவாதம் நடத்த தயாரா : அன்புமணி சவால்

பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து நேரடியாக விவாதிக்க தயார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  
  
பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதம் நடத்தத் தயாரா? என்று  அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சவால் விடுத்திருந்தார். 

இதுகுறித்து  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் செங்கோட்டையனின் சவாலை தாம்  ஏற்றுக் கொண்டதாகவும், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து விவாதிக்க, தாம்  தயார்  நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும், அதற்கான இடத்தையும், தேதியையும் நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் என அமைச்சர் கூறியிருந்தார்.

செங்கோட்டையன் இவ்வாறு கூறியிருப்பது பெருந்தன்மையா அல்லது  பயமா என்று தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். 

ஆனாலும் அவரது இந்த அறைக்கூவலை ஏற்று வரும் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு விவாதம் நடத்த தயாரா என சவால் விடுத்துள்ளார். மேலும் விவாதத்திற்கான ஏற்பாடுகளை பாமக விரைவில் மேற்கொள்ளும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.