close
முகப்புவல்லவனுக்கும் பிரஷர் குக்கரும் ஆயுதம்

வல்லவனுக்கும் பிரஷர் குக்கரும் ஆயுதம்

December 07, 2017 235Views
வல்லவனுக்கும் பிரஷர் குக்கரும் ஆயுதம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் தொப்பி சின்னம் கேட்டு விருப்ப மனு அளித்திருந்தார்.  இந்நிலையில், இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது, நமது கொங்கு முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். குலுக்கல் முறையில் சின்னமானது தேர்ந்தெடுக்கப்பட்டு நமது கொங்கு முன்னேற்ற கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ் என்பவருக்கு தொப்பி சின்னமானது வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதனை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னைமரம், விசில் ஆகிய சின்னங்கள் மற்ற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டது. 

இதன் பின்னர் செய்தியாளார்களை சந்தித்த டிடிவி தினகரன், எதிரிகளின் பிரஷரை ஏற்றவே பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் எந்த சின்னமாக இருந்தாலும் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன் என்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று தெரிவித்தார்.