close
முகப்புவிக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியனுக்கு ஈக்வடார் குடியுரிமை

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியனுக்கு ஈக்வடார் குடியுரிமை

January 12, 2018 214Views
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியனுக்கு ஈக்வடார் குடியுரிமை

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு குடியுரிமை  வழங்கப்படும் என ஈக்வடார் அரசு அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் பல்வேறு ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தஞ்சம் அடைந்தார். இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்வீடன் கீழ் நீதிமன்றம் அசாஞ்சேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதை எதிர்த்து அசாஞ்சே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஸ்வீடன் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அசாஞ்சேவுக்கு தங்கள் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என ஈக்வடார் அரசு அறிவித்துள்ளது. மேலும், ஸ்வீடன் அதிகாரிகள் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என ஈக்வடார் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.