close
முகப்புவிக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய வீரர் 

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய வீரர் 

July 17, 2017 65Views
விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய வீரர் 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் சர்வதேச தொடரில் இந்திய வீரர் ஹரிந்தர் பால்சந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்னில் விக்டோரியா ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடரானது கடந்த 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் ஹரிந்தர் பால்சந்து, ஆஸ்திரேலிய வீரர் ரெக்ஸ் ஹெட்ரிக்கை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார். முன்னதாக இந்த ஆண்டு 3 பட்டங்களை வென்ற ஹரிந்தர் இந்த ஆட்டத்திலும் வெற்றி முனைப்புடன் களமிறங்கினார். 

வெற்றியை வசப்படுத்த ஹரிந்தருக்கு  77நிமிடங்கள் ஆனது. முதல் செட்டை 12-14 என ஹரிந்தர் தவறவிட்டார். அடுத்த செட்டில் சுதாரித்த ஹரிந்தர், அந்த செட்டை 11-3 என தனதாக்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த செட்டிலும் ஹெட்ரிக்கை புள்ளிகள் எடுக்க விடாமல் ஹரிந்தர் முன்னிலை பெற்றார். நேர்த்தியாக விளையாடிய ஹரிந்தர் அடுத்த 2 செட்களையும் 11-4, 11-7 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். 

நடப்பு ஆண்டில் ஹரிந்தர் வெல்லும் 4-வது சர்வதேச பட்டம் இதுவாகும். முன்னதாக மலேசியாவில் நடைபெற்ற இரண்டு சர்வதேச தொடரிலும், அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தெற்கு ஆசிய ஸ்குவாஷ் தொடரிலும் ஹரிந்தர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.