close
முகப்புவிபத்திலும் செல்ஃபி மோகம் தேவையா? திருநாவுக்கரசர்

விபத்திலும் செல்ஃபி மோகம் தேவையா? திருநாவுக்கரசர்

July 17, 2017 49Views
விபத்திலும் செல்ஃபி மோகம் தேவையா? திருநாவுக்கரசர்

எங்கு விபத்து நடந்தாலும் அங்கு சென்று செல்ஃபி எடுக்கும் மோகத்தை மக்கள் கைவிட வேண்டுமென்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டுள்ளார். 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களை திருநாவுக்கரசர் சந்தித்தார். அப்போது, தீவிபத்தின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்திற்கு தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

விபத்து நடைப்பெற்ற இடத்தில் செல்ஃபி எடுத்த பலரும் காயமடைந்துள்ளனர், இதுப்போன்ற சம்பவங்களை அடுத்து மக்கள் விபத்து நடக்கும் இடங்களில் செல்ஃபி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் தீவிபத்து நடைப்பெற்ற இடத்திற்கு தீயணைப்பு உயர் அதிகாரிகள் யாரும் சென்று ஆய்வு செய்யாமல் இருந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.