close
முகப்புவிமான நிலையத்தில் 17 தோட்டக்களுடன் நுழைந்த பயணி 

விமான நிலையத்தில் 17 தோட்டக்களுடன் நுழைந்த பயணி 

October 12, 2017 134Views
விமான நிலையத்தில் 17 தோட்டக்களுடன் நுழைந்த பயணி 

ரேணிகுண்டா விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பதி அடுத்த ரேணிகுண்டாவில் விமான நிலையத்தில் ஐதராபாத்திற்கு செல்ல இருந்த விமானத்தில் பயணி ஒருவரை சி.ஐ.எஸ்.எப். போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 17 தோட்டக்கள் இருப்பது தெரியவந்துது.  இதனை அடுத்து  அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கி தோட்டாக்கலை வைத்திருந்தவர், நந்தியலாவில் உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வரும் ராம்மோகன்ரெட்டி என்பதும், துப்பாக்கி வைத்து கொள்வதற்காண லைசன்ஸ் இருப்பதாகவும் ஆனால், அந்த லைசன்ஸ் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்று இருப்பது முதல் கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.