close
முகப்புவிஷால் விவகாரம் தொடர்பாக ராஜேஷ் லக்கானி ஆலோசனை 

விஷால் விவகாரம் தொடர்பாக ராஜேஷ் லக்கானி ஆலோசனை 

December 06, 2017 264Views
விஷால் விவகாரம் தொடர்பாக ராஜேஷ் லக்கானி ஆலோசனை 

விஷால் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று ஆர்.கே.நகர் தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை பதிவு உள்ள வாக்காளர்கள் 1947 பேர் உள்ளனர். இவர்கள் ஒரு இடத்தில் மட்டுமே வாக்களிக்க முடியும். இவர்களின் பெயர் பட்டியல் அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும். தேர்தலுக்கு பின் இந்த இரட்டை பதிவுகள் நீக்கப்படும். 

அதிமுக, திமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளை சார்ந்த 139 பேர் நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜக சார்பாக அமித் ஷா, கங்கை அமரன், அதிமுக சார்பில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெயரும், திமுக சார்பில் ஸ்டாலின், கனிமொழி, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆர்.கே.நகரில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 228 பேர் வாக்காளர்கள் இருந்தனர், இதில் 45 ஆயிரத்து 836 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 8ஆயிரத்து 842 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். தற்போது மொத்தமாக 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக வாய்ப்பு உள்ளது.

10-ம் தேதியில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக துணை ராணுவ படையினர் வர தொடங்க உள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செலவின பார்வையாளரான ஷீல் ஆஷிஷ், அரவக்குறிச்சி பொதுத்தேர்தலின் போது செலவின பார்வையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இவரின் அறிக்கையை அடிப்படையில் தான் அரவக்குறிச்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடாவால்  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது.