close
முகப்புவெள்ளை மாளிகையில் கோலாகலமாகத் தொடங்கியது கிறிஸ்துமஸ்

வெள்ளை மாளிகையில் கோலாகலமாகத் தொடங்கியது கிறிஸ்துமஸ்

November 29, 2017 295Views
வெள்ளை மாளிகையில் கோலாகலமாகத் தொடங்கியது கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கோலாகல கொண்டாட்டங்கள் தொடங்கின. 

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மாணவர்கள், அதிகாரிகள் என பல விருந்தினர்களுக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கப்படும். இந்த கொண்டாட்டங்கள் திங்கட்கிழமை முதல் தொடங்கின. இதனையொட்டி ஜோயின்ட் பேஸ் அண்ட்ரெவ்ஸ் பள்ளி மாணவர்கள் வெள்ளை மாளிகைக்கு வர அதிபரின் மனைவி மெலனியா அழைப்பு விடுத்தார். 

இதனையொட்டி ஏராளமான பள்ளி மாணவர்கள் வெள்ளை மாளிகை வந்திருந்தனர். அங்கு மின் விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவற்றை கண்டு மகிழ்ந்தனர். அவர்களுடன் மெலனியா கலந்துரையாடினார். இதற்கு முன்னதாக நடைபெற்ற எளிய நடன நிகழ்ச்சி மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.