close
முகப்புஹபீஸ் சயீதின் அரசியல் கனவுக்கு முற்றுப்புள்ளி 

ஹபீஸ் சயீதின் அரசியல் கனவுக்கு முற்றுப்புள்ளி 

October 12, 2017 130Views
ஹபீஸ் சயீதின் அரசியல் கனவுக்கு முற்றுப்புள்ளி 

ஹபீஸ் சயீதின் அரசியல் கட்சியை பதிவு செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. 

மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் ஹபீஸ் சயீத் அரசியலில் களமிறங்க திட்டுமிட்டுள்ளார். இதற்காக மில்லி முஸ்லீம் லீக் என்ற கட்சியை தொடங்கினார்.  லாகூர் இடைத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் 3-ம் இடம் பிடித்தார். 

அடுத்த வருடம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட அவரது கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கட்சியை பதிவு செய்யக் கோரி அவர் அளித்த மனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. 

முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், தீவிரவாத செயல்களில் தொடர்புடையதால், ஹபீஸ் சயீதின் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.