close
முகப்பு’டெட்பூல்-2’ குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே ரிலீஸ் ஆகிறது

’டெட்பூல்-2’ குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே ரிலீஸ் ஆகிறது

’டெட்பூல்-2’ குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே ரிலீஸ் ஆகிறது

'சோலோ: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி' படத்துடன் போட்டியிடாமல் இருக்க ’டெட்பூல்-2’ ஒரு வாரத்திற்கு முன்பாகவே ரிலீஸ் ஆகிறது. மேலும், நியூ ம்யூடண்ட்ஸ், கேம்பிட் ஆகிய படங்களின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம்.

20th சென்சுரி ஃபாக்ஸ் (20th century fox) நிறுவனத்தின் படங்களில்  மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களாக உள்ளது சோலோ: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி (Solo: A Starwars Story) , டெட்பூல்-2 (Deadpool-2), நியூ ம்யூடண்ட்ஸ் (New Mutants) , மற்றும் கேம்பிட் (Gambit) ஆகிய படங்களாகும். அனைத்து படங்களும் முக்கியமாக கருதப்படுவதால் இதன் ரிலீஸ் தேதிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜுன் 1 அன்று வெளியாக இருந்த டெட்பூல்-2 படம் ஒரு வாரத்திற்கு முன்பாக மே-18 ஆம் தேதியே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ’ஸ்டார் வார்ஸ்’ படம் வெளியாகும் நேரத்தில் டெட்பூல்-2 படத்தையும் வெளியிட்டால் வசூலில் பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த மாற்றம். 

 ’சோலோ: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி’ படம் ’டெட்பூல்-2’வின் வெளியீட்டுக்கு ஒரு வாரத்திற்கு பிறகு என முடிவு செய்யப்பட்டுள்ளது. பல தயாரிப்பு பிரச்சனைகளை சந்தித்து வந்த ’கேம்பிட்’ படத்தின் ரிலீஸும் பிப்ரவரி 2019 ஆம் தேதியில் இருந்து ஜூன் 2019 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இயக்குனர் படத்தில் இருந்து விலகியதால் புதிய இயக்குனரை இக்குழு தேடி வருகின்றனர். மேலும், இந்த வருடம் ஏப்ரல்-13 ஆம் தேதி வெளியாக இருந்த  ’நியூ ம்யூடண்ட்ஸ்’  திரைப்படம் ஒரு வருடம் கழித்து பிப்ரவரி 2019-ல் தான் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.  இந்த வரிசையில் 2018-ல் முதலில் வெளியாகும் திரைப்படமாக ’டெட்பூல்-2’ இருப்பதால் காமிக் ரசிகர்களின் முழு கவனத்தையும் இப்படம் ஈர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.