close
முகப்பு3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை சீரமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை

3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை சீரமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை

November 22, 2017 119Views
3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை சீரமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை

உசிலம்பட்டியில் கடந்த  3 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் பெண்கள் கழிப்பறையை சீரமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மாமரத்துப்பட்டி அண்ணாநகர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு பெண்களுக்கென இலவச கழிப்பறை கட்டப்பட்டது. 3 ஆண்டுகள் கழிந்தும் இன்று வரை கழிப்பறை திறக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

மேலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதாக 2 முறை ஆழ்த்துளைக்கிணறு அமைக்கப்பட்டும் தண்ணீர் இல்லாததால் பூட்டுப்போட்டு மூடியே கிடக்கிறது என்றும், இதனால் போதிய கழிப்பிட வசதி இல்லாததால், மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ள அப்பகுதி பொதுமக்கள், கழிப்பறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.