close
முகப்புபிளிப்கார்ட் யாருக்கு? வளைத்துப் போட துடிக்கும் அமேசான்!

பிளிப்கார்ட் யாருக்கு? வளைத்துப் போட துடிக்கும் அமேசான்!

பிளிப்கார்ட் யாருக்கு? வளைத்துப் போட துடிக்கும் அமேசான்!

இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் பங்குகளை வாங்க அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  

இந்திய வர்த்தக சந்தைகளில் நீயா - நானா என போட்டி போட்டுகொண்டு வாடிக்கையாளர்களை வசப்படுத்துவதில் முன்னணியில் சண்டையிட்டு கொள்வது அமேசான் நிறுவனமும்  ஃபிளிப்கார்ட் நிறுவனமும் தான்.

இந்தியவர்த்தகத்தில் ஃபிளிப்கார்ட்டுடன் மோதும் அமேசான் அமெரிக்க வர்த்தகத்தில் வால்மார்ட் நிறுவனத்துடன் மோதிவருகின்றது. இந்நிலையில் அமேசானை வீழ்த்த வால்மார்ட் திட்டம் தீட்டி வருகின்றது. 

இந்நிலையில் அமேசானுக்கு எதிராக ஃபிளிப்கார்ட் போட்டி களத்தில் உள்ளதை அறிந்த வால்மார்ட் நிறுவனம், ஃபிளிப்கார்ட்டின் 40 சதவீத பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதனை அறிந்த அமேசான் சுதாரித்துக்கொண்டு ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்குகளை முதலில் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.