close
முகப்புஆஜரான விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி சரமாரி கேள்வி

ஆஜரான விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி சரமாரி கேள்வி

February 13, 2018 225Views
ஆஜரான விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி சரமாரி கேள்வி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் நேரில் ஆஜரானார்.

ஜெயலலிதாவின் மரணம்  தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம்  விசாரணை நடத்தியது. 

சசிகலாவுக்கும் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகள் எழுப்பி விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.