close
முகப்புதெலுங்கில் வெளியாகும் அருண் விஜயின் வெற்றிப்படம்

தெலுங்கில் வெளியாகும் அருண் விஜயின் வெற்றிப்படம்

தெலுங்கில் வெளியாகும் அருண் விஜயின் வெற்றிப்படம்

65வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொன்மையான திரைப்பட விருதுகளான தேசிய திரைப்பட விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்படும்.

நடிகர் விஜய்குமாரின் மகனான அருண் விஜய் கோலிவுட் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்,அஜித்துடன் இவர் இணைந்து நடத்த என்னை அறிந்தால் படம், இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.

அதனை தொடர்ந்து படத்தின் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வந்த அவருக்கு மற்றோரு முத்திரை பதிக்கும் படமாக அமைந்தது 'குற்றம் 23'. இதில் முதல் முறையாக இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிடுக்கான தோற்றத்துடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ஜோடியாக இதில் மஹிமா நம்பியார் நடித்திருந்தார்.

அறிவழகன் இயக்கிய இந்த படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'கிரைம் 23' என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை, நடிகர் பிரபாஸ் இன்று மாலை 5.30 மணியளவில் வெளியிட இருப்பதாக நடிகர் அருண் விஜய் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.