close
முகப்புபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகளிடம் சிபிஐ விசாரனை

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகளிடம் சிபிஐ விசாரனை

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகளிடம் சிபிஐ விசாரனை

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள் 4 பேரிடம் சி.பி.ஐ போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நாட்டில் நடைபெற்ற வங்கி முறைகேடுகள் பட்டியலில், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தற்போது ஒரு முக்கிய பிரச்சனையாக கருதப்படுகின்றது. 

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளார் என கூறப்படுகின்றது. அவர் தற்போது வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில், வங்கி முறைகேடு வழக்கில் ரிசர்வ் வங்கியின் 4 மூத்த அதிகாரிகளிடம், சி.பி.ஐ போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணைக்கு பின்னர், முறைகேடு குறித்த பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.