close
முகப்புவிஜயதரணியை நீக்க காங்கிரஸ் நடவடிக்கையா ? திருநாவுக்கரசர் கருத்து 

விஜயதரணியை நீக்க காங்கிரஸ் நடவடிக்கையா ? திருநாவுக்கரசர் கருத்து 

விஜயதரணியை நீக்க காங்கிரஸ் நடவடிக்கையா ? திருநாவுக்கரசர் கருத்து 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி தனிப்பட்ட முறையில் வரவேற்றிருந்தார். 

முன்னதாக ஜெயலலிதா படத்திறப்பை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் விஜயதரணியின் இக்கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் 

காங்கிரஸ் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக நேற்று தெரிவித்திருந்தது. அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இதை புறக்கணித்துள்ளனர். விஜயதாரணி எம்.எல்.ஏ., நிகழ்ச்சியில் புறக்கணித்திருக்கிறார்.

ஆனால் தனிப்பட்ட முறையில் வரவேற்றுள்ளதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. இருப்பினும்  இதுகுறித்து விஜயதாரணியிடம் விளக்கம் கேட்கப்படும். ஏற்கனவே சில புகார்களும் போயிருக்கிறது. கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம்; புகார் அளிக்கப்படும். என தெரிவித்தார்.